பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
இனிமையாகப் பேசும் மீன ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் நன்மை தர காத்திருக்கிறார். அதோடு சுக்கிரனின் நற்பலனும் தொடரும். ஜன.2ல் புதன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார்.சூரியனால் நினைத்த காரியம் நிறைவேறும். சுக்கிரனால் பண வரவு இருக்கும். சொந்தபந்தம் வருகை இருக்கும். கல்விக்காரகன் புதன் ஜன.2 வரை உங்கள் ராசிக்கு10-ல் இருப்பதால் பெண்களின் ஆதரவு உண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். அதன்பின் மகரத்திற்கு இடம் மாறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அலைச்சல் ஏற்படும். மனவேதனை ஏற்படலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம். கேதுவால். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.குடும்பத்தில் பெண்கள் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். சிலர் புத்தாடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வர். பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதிகாரிகளின் ஆதரவும் வந்து சேரும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. ஜன.1,2ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறலாம். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பு நிலை அடையலாம். பொது நல சேவகர்கள், அரசியல் வாதிகள் முன்னேற்றம் காண்பர். மாணவர்கள் புதனின் அருளால் சிறப்பான பலனை காண்பர். நல்ல மதிப்பெண்களும் பாராட்டும் கிடைக்கும். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். காய்கறிகள் பழ வகைகள் நல்ல விளைச்சலை கொடுக்கும். பெண்கள் குடும்பத்தாரால் புகழப்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர். உடல் உபாதைகுணம் அடையும்.
அதிர்ஷ்ட எண்: 5,9 நிறம்: வெள்ளை, செந்தூரம்
நல்லநாள்: டிச.16,17,22,23,24,25,26,ஜன.1,2,3,4,7,8,11, 12,13
கவனநாள்: டிச.27,28.சந்திராஷ்டமம்.
வழிபாடு: வெங்கடாஜலபதியை வணங்குங்கள். தட்சணாமூர்த்தி, சனீஸ்வரர் வழிபாடும் தொடர வேண்டும்.