பதிவு செய்த நாள்
10
டிச
2013
06:12
ராஜபாளையம்: சபரிமலை சன்னிதானத்தில், டிச., 31 முதல், 20 நாட்களுக்கு அன்னதானம் அளிக்க, "ஐயப்ப தர்மசேவா சங்க த்திற்கு, தேவசம்போர்டு அனுமதி அளித்து உள்ளது. தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்ட "ஐயப்ப தர்மசேவா சங்கம் சார்பில், சபரிமலையில், ஆண்டுதோறும் அன்னதானம் நடக்கிறது. கடந்த ஆண்டு, 14 நாட்கள் நடந்தது. இந்த ஆண்டு, டிச., 31 முதல் ஜன., 19 வரை, 20 நாட்கள் நடக்க உள்ளது. சங்க மாநில செயற்குழு உறுப்பினர், ராஜபாளையம் பொன்னுச்சாமி கூறுகையில், ""கடந்த ஆண்டு நடந்த அன்னதானத்தில், தினமும், 2000 பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு, காலை 9 மணி முதல் இரவு 10 வரை, அன்னதானம் நடக்க உள்ளது. தினமும் சாம்பார், ரசம், கூட்டு வழங்கப்படும், என்றார்.