களக்காடு: களக்காடு அருகேயுள்ள மேலக்கருவேலன்குளம் சவுந்திரபாண்டீஸ்வரர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இம்மாதம் 17ம் தேதி தேரோட்ட விழா நடக்கிறது. களக்காடு அருகேயுள்ள மேலக்கருவேலன்குளம் சவுந்திரபாண்டீஸ்வரர் சிவகாமி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலுக்கு கடந்த சில வருடங்களாக கேரளாவில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இக்கோவில் தமிழகத்தில் நடராஜர் எழுந்தருளியுள்ள முக்கிய 5 கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த 9ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனையொட்டி ய்வாமிக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும். விழா நாட்களில் ய்வாமி அம்பாள் வீதியுலா நடக்கும். 9ம் திருவிழாவான 17ம் தேதி மாலை 5.30 மணிக்கு தேரோட்டம் நடக்கும். 10ம் திருநாளான 18ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.