சபரிமலையில் ஐந்தாயிரம் விளக்குகள்: தடையை தவிர்க்க உஷார்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2013 10:12
சபரிமலை: மண்டலபூஜை காலத்தில் பம்பை மற்றும் சபரிமலையில் ஐந்தாயிரம் விளக்குகள் அமைத்தும், மகரவிளக்கு காலத்தில் இதை அதிகரிக்கவும் கேரள மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பம்பை- திருவேணி 66 கிலோ வாட் "சப் ஸ்டேஷன் கட்டுப்பாட்டிலிருந்து, சபரிமலைக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. சபரிமலை, பம்பை என 2 "செக்ஷன் களாக பிரித்து மின்சாரம் விநியோகமாகிறது. சபரிமலையில் 25, பம்பையில் 10 டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளது. பம்பையிலிருந்து சன்னிதானம் வரை சோடியம் விளக்கு உள்ளிட்ட ஐந்தாயிரம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு காலத்தில் மேலும் 700 விளக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மகரவிளக்கு காலத்தில் ஒரு டிரான்ஸ்பார்மருக்கு, ஒரு ஊழியர் நியமிக்கப்பட உள்ளார். மின்தடை ஏற்படாமல் இருக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காட்டில் உள்ள மின்கம்பியில் ஏதாவது பழுது ஏற்பட்டால், மாற்று பீடர் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.