பம்பையில் கேரள அரசு பஸ்கள் ஓட்ட தினமும் 6 ஆயிரம் லிட்டர் டீசல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2013 06:12
கடந்த ஆண்டை விட கூடுதல் பேர் பயணம்: பம்பையில் கேரள அரசு பஸ்களை ஓட்ட தினமும் ஆறாயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இது தனியார் பங்க்-லிருந்து தினமும் டேங்கர் மூலம் பம்பை கொண்டுவரப்படுகிறது. கேரள அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சபரிமலை சர்வீஸ் முக்கிய வருமானமாகும், இங்கு வரும் பக்தர்களில் 80 சதவீதம் பேரும் இந்த பஸ்சில் பயணம் செய்தே தீர வேண்டும். ரயில் வசதி இல்லாததால் தொலை தூரத்தில் இருந்து ரயிலில் வருபவர்கள் கேரள அரசு பஸ்சில்தான் வரவேண்டும். அதுபோல வேன், டூரிஸ்ட் பஸ்கள் நிலக்கல்லில் பார்க்கிங் செய்யப்படுவதால், தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் நிலக்கல் செல்ல கேரள அரசு பஸ்சில்தான் செல்ல வேண்டும். இதனால் அதிக சர்வீஸ் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கேரள அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு தற்போது தினமும் ஆறாயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.இதில் தொலைதூர பஸ்கள் அனைத்தும் பம்பைக்கு வரும் போது திரும்பி செல்வதற்கான டீசலும் சேர்த்து, ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட பங்கிலிருந்து டீசல் அடித்து வரவேண்டும். கடந்த பத்தாம் தேதி வரை 7370 தொலைதூர சர்விஸ்கள் நடத்தப்பட்டுள்ளது. நிலக்கல்- பம்பை இடையே 10 ஆயிரத்து 675 சர்வீஸ்கள் நடத்தப்பட்டுள்ளது. பத்து லட்சம் பக்தர்கள் வரை இதில் பயணம் செய்துள்ள்ளனர். கடந்த ஆண்டை விட இந்து 15 சதவீதம் வரை அதிகமாகும்.