திருநாகேஸ்வரம்: நாகநாதசுவாமி (ராகுதலம்) கோவிலில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் டிச.16 வரை நாள்தோறும் காலை,இரவுகளில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. சீர்வரிசை, ஊஞ்சல் உற்சவத்திற்கு பின் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.