Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விடய புரம் பெருமாள் கோவில் ... திருநாகேஸ்வரத்தில் திருக்கல்யாணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டவர்கள் வழிபட்ட சிவன்கோவில்.. கட்டுமானப்பணிகள் துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
11:12

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா கொரடாச்சேரி அருகே  நாலில் ஒன்று கிராமத்தில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட சிவன்கோவில் முற்றிலும் பழுதடைந்ததால் இடித்து விட்டு புதிதாக கட்டுமானப்பணிகள் துவங்கியுள் ளது. கோவில் கட்டுமானபணிகளுக்கு பொருளுதவி செய்ய விருப்பம் உள்ள வர்கள் கோவில் நிர்வாக குழுவை தொடர்பு கொள்ளலாம். என விழாக்குழு வினர்கள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா கொரடாச்சேரி அருகே உள்ளது நாலில் ஒன்று கிராமம். பெருமாள் அகரம், நீளனூர், சிமிழி,எலங்கார்குடி ஆகிய நான்கு கிராமங்களுக்கும் முதன்மையான கிராமமாக இருந்ததால் இக் கிராமத்திற்கு நாலில் ஒன்று என பெயர் வந்துள்ளது.  இங்கு மிகவும் பழமை வாய்ந்த சிவன்கோவில் இருந்தது. இந்தக் கோவிலில் பாண்டவர்கள் 48 நாட்கள் இங்கு தங்கி சிவனை வழிப்பட்டதாவும், அதனைத்தொடர்ந்து இங்கு சித்தர்களும் வழிபட்டுள்ளனர். என வரலாற்று செய் தி கூறுகிறது.

Default Image
Next News

சிவத் தலத்திற்கும் தென் திசையில் செல்லும் காவிரி ஆற்றில் பாண்டவர்கள் நீராடி அங்கிருந்த ஈர உடையுடன் சிவனை பூஜிக்க நடந்து வந்துள்ளனர்.  அதன் பின் கோவிலுக்கு குளம் வெட்டப்பட்டுள்ளது.(இதற்கான வரலாறு தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது) இதனால் இந்த ஆற்றிற்கு தற்போதும் பாண்ட வையாறு தலைப்பு என அ ழைக்கப்படுகிறது. வருவாய், பொதுப்பணி துறைகள் மற்றும் அரசு அலுவக கோப்புகளிலும் இப்பெயர் பதிவாகியுள்ளது. இங்கிருந்த அமிர்தநாயகி உட னுறை சுக்கிரீஸ்வரர் திருக்கோவிலில் பின்னாளில் பராமரிப்பில்லாமல் சிதி லமடைந்து இருந்தது. கோவிலை முற்றிலும் முட்புதற்கள் மண்டி காடுகளாக இருந்தது. புதற் களை அகற்றி விட்டு கோவிலில் இடிந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் அமைக்க இந்து சமய அறநிலைத்துறை அனுமதியுடன் கடந்த 2010ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த வேலு என்பவர் தலைமையில், ஐந்து பேர் கொண்ட அறங்காவல் குழு அமைக்கப்பட்டது.  பின்னர் ரூ.30 லட்சம் செலவில் கோவில் அமைக்க திருப்பணியை கிராமமக்கள் தொட ங்கினர்.

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 26ம்தேதி அம்பாள் சன்னதி இருந்த இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டினர். அப்போது மூன்று அடி ஆழத் தில் வினாயகர், அம்மன், நர்த்தனகிருஷ்ணன், தவழும் கிருஷ்ணன், சோமாஸ்கந்தர், சிலைகளுடன், மணி,சக்கரம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள்(ஐம்பொன்) கிடைத்தன. இந்தியாவில் எட்டு இடத்தில் சிவன் (சுயம்பு) சதுர பீடமாக உள்ளதாகவும், அதில் இங்கு இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது. தற்போது கோவில் கட்டு மானப்பணிகளுக்கு சிவன், அம்பாளுக்கு தனித்தனி கோவில் அமைக்க பேஸ் மட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 16 அடி சுயம்பு லிங்கத்திற்கு இருந்த இடத்தில் கொட்டகை அமை த்து ஒரு கால பூஜை நடத்தப்படுகிறது. அருகில் ஒரு கொட்டகை அமைத்து பிற சுவாமிகள் பாதுகாக்கப்படுகிறது.பல்வேறு வியாதிகள் தீர்கப்படுவதால் பக்தர்கள், பிரார்த்தனைசெய்து வருகின்றனர். சிவனுக்குரிய அனைத்து வி ஷேச தினங்களில் இங்கும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

கட்டுமானப்பணிகளை தொய்வில்லாமல் தொடர சிவத்தொண்டர்கள் மற்றும் பக்தர்களின் நன் கொடையை எதிர்பார்த்துள்ளனர். நன் கொடை வழங்க விரும்புவர்கள் திரு.வேலு, எண் 137,நாலில் ஒன்று, பெருமாள் அகரம் அஞ்சல், கொரடாச்சேரி,குடவாசல் தாலுகா, 613703 என்ற முகவரியிலும், 94438-65166 என்ற செல்போனிலும் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar