வால்பாறை: வால்பாறை அடுத்துள்ளது முருகாளி எஸ்டேட். இங்குள்ள தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் உதவி மேலாளர் அங்கூர்சதுர்வேதி ஏற்றி வைத்தார். விழாவில் இன்று இரவு 10.00 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(15ம்தேதி) காலை 9.00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்கு பின்னர், சுவாமி ஊர்வலமாக புறப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.