ஐயப்ப பக்த சபா சார்பில் 6ம் ஆண்டு திரு விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14டிச 2013 03:12
காஞ்சிபுரம்: ஐயப்ப பக்த சபா சார்பில், 6ம் ஆண்டு திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லியில் ஐயப்ப பக்த சபா உள்ளது. இச்சபா சார்பில், 6ம் ஆண்டு திரு விளக்கு பூஜை நேற்று இரவு 10:00 மணிக்கு துவங்கியது. பஜனைப் பாடலுக்கு பின் இரவு 12:00 மணிக்கு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு விளக்குகளுக்கு, கற்பூர ஜோதி ஏற்றப்பட்டது. ஏராளமான, ஐயப்ப பக்தர்கள் கலந்துக் கொண்டு, சுவாமியை வணங்கி சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, ஐயப்பா பக்த சபா குழுவினர் செய்திருந்தனர்.