ஆண்டாள் மார்கழி மாதத்தில், செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம், ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி உய்யுமாறு என்று குறிப்பிட்டிருக்கிறாள். செய்யக்கூடாத தீயசெயல்களைச் செய்யக் கூடாது. தீயவற்றைப் பேசக் கூடாது. இயன்ற வரை தானதர்மம் செய்யவேண்டும். அதிகாலை நீராடி கோயிலுக்குச் செல்ல வேண்டும். இந்த பயிற்சியை காலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.