மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டில் பெரியாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்நடந்தது.பொரசப்பட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பெரியாயி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வாஸ்து பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், சக்தி ஹோமம் நடத்தப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. பிறகு 7 மணிக்கு கடம் புறப்பாடாகி, 7.15 மணிக்கு பெரியாயி கிரி அய்யர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. பொரசப்பட்டு சுற்றியுள்ள கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர்.