சின்னசேலம்: சின்னசேலம் சிவன் கோவிலில் உள்ள அய்யப்பனுக்கு அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் மண்டலாபிஷேக விழா நடந்தது.சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் உள்ள அய்யப்பனுக்கு அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஆண்டு துவக்கத்தையொட்டி மண்டல பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமும், தொடர்ந்து அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. சேவா சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணி, செயலாளர் முருகேசன், ஆண்டி, ராமசாமி, ராமர் உட்பட பலர் பங்கேற்றனர். மாலை வினாயகர், முருகன், ஐயப்பன் சாமிகள் திருவீதியுலா நடந்தது. அன்னதான நிகழ்ச்சியில் 1000 பேர் பங்கேற்றனர்.