காரிமங்கலம்: காரிமங்கலம் அக்ரஹாரம், லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் பவுர்ணமி சத்ய நாராயண பூஜை நாளை, (டிச., 17) நடக்கிறது. இதையொட்டி, காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், காலை, 10 மணிக்கு சத்ய நாராயண பூஜையும் நடக்கிறது. டாக்டர் பன்னக சைனம் குடும்பத்தினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் மோகன்குமார், உதயசங்கர் ஆகியோர் செய்து வருகின்றனர்.