ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்க்ழி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் கவுசிக ஏகாதசியன்று ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் ஆண்டாளுக்கு 108 பட்டுப்புடவைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.