பழநி: பழநி கோவிலில் தைப்பூச திருவிழா, தை மாதம் பிறக்கும் முன், மார்கழி, 27ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பழநி, பெரியநாயகியம்மன் கோவிலில் தைப்பூச விழா, ஜனவரி, 11ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை, நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில், மலைக்கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தைப்பூச விழாவில், திருக்கல்யாணம், ஜன., 16ம் தேதி நடக்கிறது. தேரோட்டம் ஜன., 17ம் தேதி நடக்கவுள்ளது.