பட்டிவீரன்பட்டி: எம்.வாடிப்பட்டியில் மார்கழி முதல் தேதி, பவுர்ணமியை முன்னிட்டு ஊர்பொதுமக்கள் சார்பாக முத்தாலம்மன் கோயிலில் மழை வேண்டி குத்துவிளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. ஊர் நாட்டாமை சின்னகூத்தன், வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் மோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். சேவுகம்பட்டி பேரூராட்சி துணை தலைவர் சதீஸ்குமார், சமுதாய நாட்டாமைகள், விவசாயிகள் சங்க தலைவர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 101 பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.