திருப்பத்தூர்: தர்மசாஸ்தா ஆலயத்தில் உள்ள ஐயப்பனுக்கு திங்கள்கிழமையன்று கணபதி ஹோமத்துடன் சாஸ்தா ஹோமமும் நடைபெற்றது. தொடர்ந்து காலையில் லட்சார்ச்சனை துவக்க விழா தொடங்கியது. சிவாச்சாரியர்களால் 7 புனித கலசங்களில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.