Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருக்கன்குடி கோயில் உண்டியல் ... பழநி கிரிவீதியில் தனியார் யானை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவரடியார் வழங்கிய தான கல்வெட்டு :தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2013
11:12

தஞ்சாவூர்: சோழர்காலத்தில், சத்தியமங்கலம் சோழீஸ்வரர் ஸ்வாமி கோவிலை பராமரிக்க, தேவரடியார் வழங்கிய தானத்தை விளக்கும் வகையில், செதுக்கப்பட்ட அரிய கல்வெட்டு ஒன்றை தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து, வெளிப்படுத்தியுள்ளனர். புதுகை மாவட்டம், குளத்தூர் தாலுக்கா, சத்தியமங்கலம் என்னும் ஊரில் சோழீஸ்வரர் ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுள்ள கல்வெட்டு குறித்து அப்பகுதியினர் பாலு, முருகேசன், பாலசுப்பிரமணியன், பஞ்., செயலர் சண்முகம். ராமசாமி, பஞ்., யூனியன் பணி மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் தஞ்சை ஆய்வுக்குழுவினருக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன் உள்பட வரலாற்று ஆய்வுக்குழுவினர், சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று, கல்வெட்டை, படி எடுத்து, ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவு குறித்து பேராசிரியர் கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் கூறியதாவது: சோழீஸ்வரர் ஸ்வாமி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் எழுத்தமைதியை கொண்டு, நோக்கும்போது, 12,13ம் நூற்றாண்டு வகையை சேர்ந்தது என, கூறலாம். தற்போது, சோழீஸ்வரர் கோவில் எனப்படும் இந்த கோவில் அந்தக்காலத்தில் ராராசுரமுடைய நாயனார் கோவில் என்னும் பெயரிட்டு அழைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் துவக்கத்தில், மன்னர் பெயர் இருக்க வேண்டிய இடம் வெற்றிடமாக உள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள கடவுளை குறிப்பிடுவதற்காக, ராசராசசுரமுடைய நாயனார் என்பதற்கு, சுருக்கெழுத்தாக, ராராசுர என்னும் கிரந்த எழுத்து வடிவத்தில் எழுதியுள்ளனர். இந்த கோவிலுக்கு தானம் அளித்தவர், கோவிலை சார்ந்த தேவரடியார் காயக்கம்மர் எனவும், இவர் நம்பெருமாள் நாயனார் தேவதானமாக வீரபத்திரன் குடிகாட்டில் சுந்தர வாய்க்கால், கிணறு, ஏத்தம், இதை சூழ்ந்த மரங்களை பேருள்ளருளனாடி கொண்ட சோழ நாடாழ்வானிடம் விலை கொண்ட, அதற்கான விலை பொன் எண்பத்தாறும், நிச்சயித்து எழுதி தந்த சாசனம். இந்நிலத்தில் இருந்து வரும் பயிர் பதினாறு கால நெல்லும், ஆடி குறுவைக்கு அரை வரிசையும், அற்பசி குறுவைக்கு முக்கால் வரிசையும், பாக்கு, அடைக்காய், மூன்று பணமும் தருவதற்கு ஒப்புக்கொண்டு, கல்வெட்டை வெட்டி, தானமாக அளித்துள்ளார். இதில், ஸ்ரீ காங்கேயன், முடி கொண்ட நாடாழ்வான், முத்தரையன், அருந்தவன் விழுப்பிரையர், அழகிய சோழ நாடாழ்வான் தற்குறி ஓமழகிய, முடிபேரையர் கூத்தன் அரையன் எழுத்து என, சாட்சி கையெழுத்தும் போட்டுள்ளனர். இந்த கல்வெட்டில் இருவர் தற்குறி என, குறிப்பிடப்பட்டு, அவர்களுடைய கையெழுத்துக்கு, கீரல் எனப்படும் குறியீடு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar