பதிவு செய்த நாள்
18
டிச
2013
11:12
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில்,பக்தர்கள் காணிக்கையாக,17லட்சத்து 70ஆயிரத்து 753 ரூபாய், 72 கிராம் தங்கம் வசூலானது. மாரியம்மன் கோயில் உண்டியல்கள், நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. கோயில்பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, கோயில் செயல்அலுவலர் தனபாலன், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி முன்னிலையில், கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தினர் மற்றும் மகளிர்சுயஉதவிக்குழு பெண்கள், கோயில் பணியாளர்கள், அலுவலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்தில், பக்தர்களின் காணிக்கையாக , 17லட்சத்து 70ஆயிரத்து 753 ரூபாய், 72 கிராம்தங்கம் , 145 கிராம்வெள்ளி , 6கிலோ தகரம் செலுத்தியிருப்பது தெரியவந்தது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.