கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ராதரிசனம் சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. எட்டயபுரம் எட்டீஸ்வர மூர்த்தி கோயிலில் அதிகாலை நடைதிறந்து மகா கணபதி நடந்தது. புண்ணிய வாஜனம் மகா சாங்கல்பம் கலச ஆவாகன பூஜையும், நடராஜருக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சங்காபிஷேகம் சிறப்ப அலங்காரம் அர்ச்சனை வேபாராயணம் நடந்தது.இதையடுத்து பசு(ஆ) விற்கும் நடராஜருக்கும் (ருத்ரா) ஏக்கால நாட்டிய தாண்டவ சிறப்புதீபாராதனை நடந்தது. சிவாமியம்மாள் நடராஜர் மாணிக்கவாசகர் சப்பரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முழங்க நான்கு ரதவீதிகளிலும் திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏற்பாடுகளை எட்டயபுரம் சமஸ்தானத்தார் செய்திருந்தனர்.