கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திருவாதிரை ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2013 10:12
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில், மார்கழி திருவாதிரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, காலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5:00 மணிக்கு அபிஷேகமும், 6:15 க்கு தீபாராதனையும், 8:00 க்கு ஸ்ரீபூதபலியும்,10:00 க்கு சிறப்பு அபிஷேகமும், பகல்11:00 மணிக்கு அம்மனுக்கு தங்கஆபரணங்கள் மற்றும் வைரமூக்குத்தி அணிவித்து சிறப்புபூஜையும் நடந்தது. மாலை 6:30 க்கு சாயரட்சை பூஜையும், 6:15 க்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. உற்சவ அம்பாளை, கோயில் மூலஸ்தானத்திலிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து,கொலு மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் வைத்து, தாலாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு பல்லக்கில் எழுந்தருளினார். வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும் நடந்தது.