பதிவு செய்த நாள்
19
டிச
2013
11:12
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. நேற்று முன்தினம் கல்யாண பசுபதீசுவரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனாகிய பசுபதீசுவரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை, 6 மணிக்கு நடராஜருக்கு பல்வேறு வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10 மணிக்கு பஞ்சமூர்த்தி ஸ்வாமிகள் புறப்பாடு நடந்தது. நாட்டியாஞ்சலி முன்னிட்டு, மாலை, 5மணிக்கு துரை பாரதிதாசன், தங்கமணி, சரவணா, வெங்கடேஸ்வரன், ஆகியோரின் நாதஸ்வரம், தவில் கச்சேரி நடந்தது. பின் மங்களூர் சகோதரிகள், ராஜேஸ்வரி, பிரசாந்த்சாஸ்த்ரி, மீனாட்சி சாகர், மூர்த்தி, ஜீவிகா, அபிநயா, நித்யஸ்ரீ, வர்தினி, தனுஸ்ரீ, ஹம்சினி, அக்ஷயநிவேதா, ஐஸ்வர்யா, பிரிவிதா, ஆகியோரது பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8 மணிக்கு ஐதராபாத் சினேக லதா குச்சிப்புடி நடனம், டெல்லி சாந்த் கரவர்த்தி, ஆஸ்திரேலியா சந்திரிகா சீனிவாஸ் ஆகியேரது பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பஞ்சமூர்த்திகள் புறப்படும் நிகழ்ச்சியில், ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை நடந்த பிறகு, ஸ்வாமிகள் சப்பரத்தில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஸ்வாமிளை தூக்கிச் செல்வது யாருக்கு? முறை என, அர்ச்சகர்கள், சிவனடியார்கள், கட்டளைகாரர்கள் ஆகிய மூன்று குழுவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் மேலாக இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் கோவில் நிர்வாகம் தலையிட்ட பின், ஒரு மணி நேரம் தாமதமாக ஸ்வாமி புறப்பாடு நடந்தது. இதுபோல் ஆண்டு தோறும், ஸ்வாமியை தூக்கிச் செல்வது யார்? என, பிரச்னை ஏற்படுகிறது. இதனால், முன்கூட்டியே கோவில் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடந்தி சுமூகமான தீர்வு ஏற்பட்டிருந்தால், ஸ்வாமி புறப்பாட்டில் சிக்கல் ஏற்பட்டு இருக்காது என பக்தர்கள் தெரிவித்தனர்.