பதிவு செய்த நாள்
19
டிச
2013
11:12
நல்லவர்கள் துன்பத்திற்குள்ளாவதும், தீயவர்கள் இன்பமாய் இருப்பதும் மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்துவதாக உள்ளன. இயேசுவின் காலத்திலும் இந்த நிலை இருந்தது. இதுபற்றி, இயேசு, தனது சீடர்களுக்கு கூறிய உவமைக்கதையைக் கேளுங்கள். பணக்காரர் ஒருவர், தனது நிலத்தில் தரமான விதைகளை சாகுபடி செய்திருந்தார். ஒரு சமயம், அவரது எதிரிகள், மட்டமான விதைகளை அதில் கலந்து விட்டனர். தரமான நாற்றுகளுக்கு மத்தியில் களைகள் அதிகரித்திருப்பதை பார்த்த ஊழியர்கள், தங்கள் முதலாளியிடம், ""ஒரே நாளில் களைகளை அகற்றிவிடுகிறோம், என்றனர். அதற்கு முதலாளி, களைகளை பறிக்க முற்படும்போது, தரமான நாற்றுகளையும் சேர்த்து பறிக்க நேரிடும். எனவே, அறுவடையின் போது களைகளை ஒதுக்கி விடலாம், என்றார். மனிதகுலத்திற்கான தீர்ப்பு விண்ணரசில் வழங்கப்படும். ஒவ்வொருவரும் அவரவர் செய்த செயல்களுக்கேற்ப பலன்களை பெறுவர். பதரும், தானியமும் பிரிக்கப்படுவதைப் போன்று , நல்லவர்களும், தீயவர்களும் பிரிக்கப்படுவர் என்பதை இயேசு, தனது சீடர்களிடம் உறுதிப்படுத்தினார்.