திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 91 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.கோவில் உண்டியலை ஆண்டுக்கு இரு முறை எண்ணுவது வழக்கம். அதன்படி, உண்டியல் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையாக, நேற்று முன்தினம் உண்டியல் திறக்கப்பட்டது. அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 91 ஆயிரத்து, 597 ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.