பதிவு செய்த நாள்
20
டிச
2013
11:12
லாலாப்பேட்டை: மாதங்களில் சிறந்தது மார்கழி. இந்த மாதம் ஆன்மிக ரீதியாக மட்டும் அல்லாது அறிவியல் ரீதியாகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி கோவில்களுக்குச் செல்வது உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் பக்தர்கள் பஜனை செய்வது வழக்கம். இந்தாண்டு மார்கழி, 1ம் தேதி முதல் பஜனையை துவக்கினர். இதன்படி, கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை செம்போன்ஜோதிஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, சிவனடியார்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பின், லாலாப்பேட்டை மெயின்ரோடு, பகவதி அம்மன் கோவில் தெரு, காந்திசிலை, போலீஸ் ஸ்டேஷன் வழியாக சிவனடியார்கள், திருப்பாவை, திருபுகழ், போன்ற பஜனை பாடல்களை பாடி சென்றனர். இதில், 50க்கும் மேற்பட்ட சிவனடியாளர்கள் பங்கேற்று பஜனை பாடல்களை பாடி சென்றனர்.