பதிவு செய்த நாள்
21
டிச
2013
10:12
பாபநாசம்: பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் அகஸ்தீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ஸ்வாமி வீதியுலா நடந்தது. பாபநாசம் அருகே கீழகபிஸ்தலம் வெள்ளாளர் தெருவில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடன்உறை அகஸ்தீஸ்வரர் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, காலையில் திருக்கல்யாணம் திருநடன நிகழ்ச்சியும், மாலை கண்ணன் பூ போடுதல் நிகழ்ச்சியும், இரவு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும், தொடர்ந்து ஸ்வாமி வீதியுலாவும் நடந்தது. வாணவேடிக்கை முழங்க, மேள தாளங்களுடன் நடந்த வீதியுலாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமத்தலைவர் ராமநாதன் பிள்ளை, காரியஸ்தார் சாமிநாதன் மற்றும் நாட்டாமைகள் கோயிந்தராஜ், குருமுர்த்தி உள்பட, கிராமத்தினர் செய்தனர்.