கிருஷ்ணகிரியில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலில் 26-ஆம் ஆண்டு மண்டல பூஜை கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மண்டல பூஜையை முன்னிட்டு, மஹாகணபதி ஹோமம், பஞ்ச அபிஷேகம், சுத்திகலச பூஜை, கொடிமரப் பூஜை, கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் 108 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மஹாகணபதி பூஜையும், அபிஷேகங்களும், மலர் நிவேத்தியமும் நடைபெறுகின்றது. வருகிற 26-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.