திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவிலில் வசதிகள்: ஆட்சியர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு பக்தர்களுக்கு தேவையான தங்கும் வசதி, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை என புகார் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அ. முத்தம்மா கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்தார். பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ஆட்சியரிடம் விளக்கினார். பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யவும், வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவில் தரிசனம் செய்து திரும்பவும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார். வெளியூர் பக்தர்களின் வசதிக்காக ஊர்களின் பெயர், திசை, கி.மீ. எழுதப்பட்ட பெயர் பலகைகளை புதுப்பிக்க வேண்டும். ஆலயத்தை சுற்றி குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். உபயோகமற்ற பொருள்களை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பக்தர்களின் தேவையறிந்து கோவில் நிர்வாகம் வசதிகளை செய்துத் தர வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.