வனதிருப்பதி புன்னை ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயிலில் பூஜை நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2013 11:12
மார்கழி மாதத்தை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வரை, கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, 5.45-க்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, விசேஷ திருவாரதனம், காலை 7 மணிக்கு சகஸ்ர நாம அர்ச்சனை, 8-க்கு கால சந்தி பூஜை, பகல் 11.30-க்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 6 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை நடைபெறுகின்றன. மார்கழி மாதம் முழுவதும் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைதிறந்திருக்கும்.