Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் ... திருப்பரங்குன்றம் சமணர் குகையில் தூய்மைப்பணி! திருப்பரங்குன்றம் சமணர் குகையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசத்துக்கு தயாராகும் கோவில்: சென்னிமலையில் பக்தர்கள் உற்சாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 டிச
2013
10:12

சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், தைப்பூசத் தேர் திருவிழா, ஜனவரி, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளதால், தற்போது முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னிமலை முருகன் கோவிலில், சுப்பிரமணிய ஸ்வாமி, வள்ளி, தெய்வானைக்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா, 15 நாட்கள் வெகுவிமர்சையாக நடக்கும். 2014, ஜனவரி, 9ம் தேதி காலை, 7 மணிக்கு கொடியேற்றத்துடன், தேர் திருவிழா துவங்க உள்ளது. தொடர்ந்து, கோவிலில், 10ம் தேதி இரவு பல்லக்கு சேவையும், 11ம் தேதி இரவு, 8 மணிக்கு மயில் வாகனக்காட்சியும், 13ம் இரவு, 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளிமயில் வாகனக்காட்சியும் நடக்கிறது. 14ம் தேதி இரவு, 8 மணிக்கு யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா நடக்கிறது. 15ம் தேதி மாலை, 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், இரவு, 9 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும், 16ம்தேதி இரவு, ஏழு மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது. வரும், 17ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை, 7 மணிக்குள், மகர லக்னத்தில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 18ம் தேதி மாலை, 5 மணிக்கு தேர் நிலை வந்தடைகிறது. 19ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சியும், 20ம் தேதி இரவு தெப்போற்சவமும், பூதவாகன காட்சியும் நடக்கிறது.
வரும், 21ம் தேதி செவ்வாய்கிழமை இரவு, 8 மணிக்கு மகாதரிசனம், அன்று நடராஜபெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா நடக்கிறது. அன்று, சென்னிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். 22ம் தேதி, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் சபர்மதி, கோவில் செயல் அலுவலர் பசவராஜன், அலுவலர்கள், அர்ச்சகர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar