பதிவு செய்த நாள்
23
டிச
2013
10:12
மதுரை: மதுரை சி.எஸ்.ஐ., உவெப் நினைவு சர்சில், அனைத்து திருச்சபைகளின் சார்பில், கிறிஸ்துமஸ் கீத ஆராதனை விழா, நேற்று நடந்தது. பங்குத்தந்தை விஜயக்குமார் தலைமை வகித்தார். சென்னை ஜெயசிங், "கிறிஸ்து பிறப்பு பற்றி பேசினார். அந்தந்த திருச்சபைகளை சார்ந்தோர், தனியாகவும், குழுவாகவும் பாடல்களை பாடி, மகிழ்ந்தனர். சவுந்திரராஜன், ராஜசேகரன், மனுவேல் ஜெயராஜ், சுந்தரராஜன், பிலோ தாஸ், லில்லி ஜெய சீலன், மாலினி, ரஜினி பிரேம லதா ஆகியோர் பேசினர். பொறுப்பாளர் ஆனந்தராஜ், விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.