திருப்புல்லாணி பெருமாள் சுவாமி கோயிலில் உழவாரப்பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2013 12:12
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர் பெருமாள் சுவாமி கோயிலில் கோவை மாவட்ட திருக்கோயில் பக்தர் பேரவை பொதுநலச்சங்கத்தின் சார்பில் நேற்று காலை உழவாரப்பணி நடந்தது. கோவை மாவட்ட திருக்கோயில் பக்தர் பேரவை மாவட்ட தலைவர் எஸ்.பி.ரவி தலைமையில்,கோயில் திவான் மகேந்திரன் துவக்கி வைத்தார்.கோயில் பிரகாரம், தூண்கள்,சொர்க்க வாசல் மண்டபம், கோயில் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்றும் டிச., 24ல் பணிகள் நடைபெறுகிறது.70க்கும் அதிகமான பக்தர்கள் உழவாரப்பணியை மேற்கொண்டனர்.கோயில் நிர்வாக அலுவலர் சுவாமிநாதன்,ஊராட்சி தலைவர் முனியசாமி,பேஷ்கார் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.