நாகலாபுரத்தில் ஐய்யப்ப, முருக பக்தர்கள் பூக்குழி இறங்கும் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2013 12:12
போடி: போடி அருகே நாகலாபுரத்தில் ஐய்யப்பன், முருக பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பூக்குழி இறங்கும் விழா நடந்தது. போடி அருகே நாகலாபுரத்தில் ஐய்யப்ப, முருக பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பூக்குழி இறங்கும் விழா தலைவர் சுருளிராஜ் தலைமையில் நடந்து. இதில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை 600க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவினையொட்டி குத்துவிளக்கு பூஜை, யாக பூஜை, சுவாமி நகர்வலம் நடந்தன. விழாவினையொட்டி குத்துவிளக்கு பூஜை, யாக பூஜைகள் நடந்தன. காண்பதற்காக சுற்று கிராம பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளாசி பெற்றனர்.