சோழர்காலத்து கோவில் கட்டும் பணி: 30 வயது இளைஞரின் சாதனைக்கு உதவலாம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2013 10:12
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சிதில மடைந்த சோழர்காலத்து கோவிலை பல்வேறு எதிர்புகளுக்கு இடையே 30 வயது இளைஞர் நன்கொ டையாளர்கள் மூலம் புதுப்பித்து வருகிறார். சிவ பக்தர்களின் பங்களிப்பினை எதிர்பார்த்துள்ளார். மாமான்னன் முதலாம் ராஜராஜசோழன் பெயரன், கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் மகனும், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன் எனும் சோழ அரசர்களின் உடன்பிறப்பான வீரராஜேந்திர சோழன் கி.பி.1063 ம் ஆண்டு மணி முடிசூடி 1070ம் ஆண்டு வரை சோழ பேரரசனாக விளங்கினான். இந்த மன்னர்கள் காலத்தில் சோழ மண்டலத்தில் 108 சிவத்தலங்கள் கட்டப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பெரிய குருவாடியில் தற்போது அகத்தீச்சரம் எனும் சிவாயலம் கற்றளியாக விளங்குகிறது. இதனை வீரரா ஜேந்திர சோழன் காலத்தில் எடுப்பித்தவன் அரங்கன் திருச்சிற்றம் பலமுடையான் எனும் வானவன் மூவேந்த வேளான் ஆவான். இதற்கான கல்வெட்டு செய்திகள் கூறுகிறது. இடைக்கால சோழர் கலைப்பணியில் அமைந்த அழகிய இக்கோவில் உப பீடம் முதங் சிகரம் முதல் கலசம் வரை கருங்கல் கட்டுமானப்பணியில் இருந்தது. ஆனால் இக்கோவில் இருந்த சுவடே இல்லாமல் சிதிலமடைந்து முட்புதற்கள் மண்டி தரை மட்டமாக இருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் வெங்கட்ராமன் கனவில் தோன்றிய ஈசன் அந்த கோவில் கட்டி குடமுழக்கு நடத்த தெரிவித்ததன் பேரில் அப்பகுதியில் தெரிவித்துள்ளார். கிராமம் மற்றும் குடும்பத்தின் எதிர்ப்புகளை மீறி கடந்த எட்டு ஆண்டு களாக பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் கோவில் கட்டுமானப்ப ணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது 60 சதவீதப்பணிகளை முடித்துள்ளார். தற்போது கோவிலில் பிற தெய்வங்களுடன் அம்மனும் அருள்பாலித்து வருகிறார். மேலும் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள சிவ பக்தர்கள் தங் கள் பங்கினை செலுத்த 9786386104 என்ற கை பேசியை தொடர்பு கொள்ளலாம்.