பதிவு செய்த நாள்
24
டிச
2013
11:12
சபரிமலை: சபரிமலையில், மண்டலபூஜை, 26 ம் தேதி நடக்கிறது. இந்த பூஜை முடிந்து, 3 நாட்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும். சபரிமலையில், மண்டலபூஜை, நாளை மறுநாள், 26-ம் தேதி நடைபெறுகிறது. பூஜை முடிந்து இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும்; தொடர்ந்து, 29 தேதி வரை, நடை முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும். இந்த நாட்களில், துப்புரவு பணிகள் முழு வீச்சில் நடைபெறும்; மகரவிளக்கு காலத்துக்கு தேவையான பொருட்கள், சன்னிதானத்தில் கொண்டு சேகரிக்கப்படும்; அப்பம் மற்றும் அவரணை தயாரித்து, சேமித்து வைக்கப்படும். இந்த, 3 நாட்களிலும், பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். 30-ம் தேதி காலை, 10:00 மணிக்கு பின், பம்பையிலிருந்து, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். எனவே, மண்டலபூஜை தினத்தை கணக்கிலெடுத்து, 26-ம் தேதி இரவு, 9:00 மணிக்குள் சன்னிதானத்துக்கு வந்து சேரும் வகையில், பயணத்திட்டத்தை, பக்தர்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். மகரவிளக்கு பூஜைக்காக, 30-ம் தேதி மாலை, நடை திறக்கப்படும். ஜன., 20 ம் தேதி காலை, 7:00 மணி வரை, திறந்திருக்கும். 14-ல், மகரவிளக்கு விழா நடைபெறுகிறது. 19-ம் தேதி நெய்யபிஷேகம் இல்லா விட்டாலும், பக்தர்கள் இரவு, 10:00 மணி வரை தரிசனம் செய்யலாம். 20-ம் தேதி காலை, பந்தளம் மன்னர் பிரதிநிதியை தவிர, வேறு எவருக்கும் தரிசன அனுமதி கிடையாது.