திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகேயுள்ள வனதிருப்பதி கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருச்செந்தூர் குரும்பூர் அருகேயுள்ள புன்னைநகர் வனத்திருப்பதி புன்னை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் ஜனவரி 13ம் தேதி ( மார்கழி மாதம்) வரை தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறப்பை தொடர்ந்து கோபூஜையும், காலை 5.45 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. காலை 6.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து விசேஷ திருவாரதனம், காலை 7.00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 8.00 மணிக்கு காலசந்தி பூஜை, பகல் 11.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6.00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9.00 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடக்கிறது. மேலும் மார்கழி மாதம் முழுவதும் காலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை தொடர்ந்து நடைதிறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.