பதிவு செய்த நாள்
24
டிச
2013
11:12
கடலூர்: கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள, வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பாவை சொற்பொழிவு கடந்த 15ம் தேதி, முதல் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு, தினமும் காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஆண்டாள், பெருமாளுக்கு திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமுறை நடக்கிறது. மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். இரவு 7:00 மணி முதல், 8:00 மணி வரை, துரையன், சொற்பொழிவு ஆற்றுகிறார். வரும் ஜனவரி 1ம் தேதி, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அன்று காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு, திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு 10008 வடை மாலை சாற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11ம் தேதி, காலை 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும், மறுநாள் 12ம் தேதி, காலை 7:00 மணிக்கு, தங்க கருட சேவையும் நடக்கிறது. வரும் ஜனவரி 5ம் தேதி, திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது. இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 13ம் தேதி, பரிசுகள் வழங்கப்படும். விவரங்களுக்கு கோவில் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.