ராமேஸ்வரம்: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தங்கத்தேர் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து கிடக்கிறது. இந்த தேரினை இழுக்க விரும்பும் பக்தர்கள் ரூ.2,000 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் இந்த தங்கத்தேர் மிகவும் தூசி படிந்து காணப்படுகிறது. இந்த தங்கத்தேர் இன்னும் பாலிஷ் செய்யப்படாமலும், சரிவர நிர்வாகிக்கப்படாமலும் பொலிவிழந்து உள்ளது. தங்கத்தேரை முறையாக பராமரிப்பதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.