பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
கம்பம்:
அய்யப்ப பக்தர்களுக்கு, 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன குடிநீர்
சுத்திகரிப்பு மையம், பம்பையில் அமைக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன்
கோயிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் 1 முதல் 5 நாட்கள் நடை
திறக்கப்படும்போதும், மண்டல பூஜை, மகரவிளக்கு காலங்களில் தரிசனம்
செய்யவும், நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
சபரிமலை சன்னிதானத்தின் தண்ணீர் தேவையை, குன்னார் அணை பூர்த்தி செய்கிறது.
அந்த நீரை, பம்பையில் சுத்திகரிப்பு செய்து, சப்ளை செய்கின்றனர். ஆனாலும்,
இங்கு, "பில்டர் பாய்ன்ட் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளை கடந்து விட்டதால்,
சரியாக சுத்திகரிப்பு செய்ய முடியவில்லை. எனவே, கேரள குடிநீர் வாரியம்,
பம்பையில், 25 கோடி ரூபாய் மதிப்பீல், புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம்
அமைக்க, திட்டமிட்டுள்ளது.