ஆனைமலை:ஆனைமலையை அடுத்துள்ள ரமணமுதலி புதூர் ஊராட்சியில், வயல் வெளியில் அமைந்துள்ள மண்கண்டீஸ்வரர் உடனமர் மகுடீஸ்வரி அம்மன் கோவிலில் இன்று மகா கணபதி ஹோமம், மகா ப்ரித்தியங்கரா தேவி ஹோமம், மற்றும் கால பைரவர் ஹோமம் நடக்கிறது. காலை 6:30க்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கும் யாகம் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவநேச அடிகளார் செய்துள்ளார்.