பரமக்குடி: பரமக்குடி சிவன் கோயில்களில் சிவபெருமான் "அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளும் லீலையான, காளபைரவ அஷ்டமி விழா நேற்று நடந்தது. விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயிலில், நேற்று அதிகாலை 4 மணிக்கு, மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் காலை 9மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுகடன் வீதியுலா வந்தனர். இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயிலிலும், மீனாட்சி - சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்த பின்னர் வீதியுலா வந்தனர். எமனேஸ்வரத்தில் எமனேஸ்வரமுடையார், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.