சிவகங்கை: சிவகங்கை அருகே திருமலைகோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் பிரகாரத்தில், காலபைரவர் சன்னதி உள்ளது. இந்த, சன்னதியில் உள்ள பைரவருக்கு, நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை யாகசாலையுடன் பூஜை துவங்கியது. பிற்பகலில் பத்மபீடத்தில் அமர்ந்த காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டன. கோயில் அர்ச்சகர் கணேசகுருக்கள் தலைமையில், பூஜைகள் நடந்தது.