சிவகங்கை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் புதன்கிழமை அஷ்டமி சப்பர பவனி விழா நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும், பிரியாவிடை சமேதராய் சோமநாதர் சுவாமியும் கோயில் முகப்பு மண்டபத்தில் அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.