பதிவு செய்த நாள்
28
டிச
2013
10:12
திருப்பதி: புத்தாண்டு அன்று, திருப்பதி, திருமலை மலைபாதை, 24 மணி நேரமும் திறந்திருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேவஸ்தான தகவல்கள் தெரிவித்ததாவது: புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களில், பக்தர்களின் வசதிக்காக, மலை பாதைகள், 24 மணி நேரமும் திறந்திருக்கும். பாத யாத்திரை பக்தர்களின் சுமைகளை கொண்டு செல்ல, கூடுதல் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும். திருமலை மட்டுமன்றி, திருச்சானூர், ஸ்ரீனிவாசமங்காபுரம், அப்பளாய்குண்டா போன்ற, தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில், அனைத்து வசதிகளும் செய்யப்படும். திருப்பதி அருகே, வடமாள்பேட்டை ரயில் மேம்பாலத்தில், செப்பனிடும் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று, காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் அனைத்தும், அப்பளாய்குண்டா, தடுக்கு ரயில் நிலையம் வழியாக திருப்பி விடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.