கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி மகான் பக்கீர் அப்பா ஒலியுல்லா தர்காவில் உரூஸ் என்னும் கந்தூரி விழா திருப்புல்லாணி ஒன்றிய முன்னாள் தலைவர் அமீர் தலைமையில் நடந்தது. சித்தார்கோட்டை தொழிலதிபர் தஸ்தக்கீர்,சாத்தான்குளம் நாகூர் கனி, கீழக்கரை எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் இம்பாலா சுல்த்தான் செய்யது இபுராகிம் முன்னிலை வகித்தனர்.விழாவை ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை நூர் முகம்மது தொடங்கி வைத்தார்.கமிட்டி செயலாளர் அன்வர் வரவேற்றார். விழாவில் இஸ்லாமியா இன்னிசை நிகழ்ச்சி மற்றும் திரைப்படக்குழுவினரின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.இன்று அதிகாலை குதிரைகளுடன் ஜூம்ஆ பள்ளிவாசலில் இருந்து சந்தனக்கூடு சிறப்பு ஊர்வலம் தாரை, தப்பட்டைகள் முழங்க புறப்பட்டு,முக்கிய வீதிகள் வழியாக சென்று பின் தர்கா வந்தடைந்தது.அங்கு சந்தனம் பூசப்பட்டு,நல்லிணக்க சிறப்பு பிரார்த்தனை நடந்தது.கமிட்டி தலைவர் நஜீமுன் அலி,செயலாளர் அன்வர், தலைவர் சம்சுதீன்,துணை செயலாளர்கள் நூர் முகம்மது,முஹப்பத்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.