சேலம்: பழைய சூரமங்கலம் ஸ்ரீ மணிகண்டன் ஆஸ்ரமத்தில், மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடந்தது. மண்டலபூஜையை முன்னிட்டு, ஐயப்பனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். யாக பூஜையில் ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.