திண்டுக்கல்: திண்டுக்கல் ஐயப்பன் மணிமண்டபத்தில் 20 ம் ஆண்டு பூஜை, பஜனை மற்றும் அன்னதான விழா நடந்தது. குருசாமி பால்பாண்டியன் தலைமை வகித்தார். அம்மன் அறக்கட்டளையை சேர்ந்த அங்கிதராஜன், திருவருட் பேரவை சங்க தலைவர் குப்புச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.