மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அய்யப்பன் கோவிலில் 7ம் ஆண்டு சிறப்பு மண்டல பூஜை நடந்தது.மூங்கில்துறைப்பட்டு ஸ்ரீதர்மசாஸ்தா அன்னதான சேவா சமிதி சார்பில் நடந்த மண்டல அபிஷேக விழாவில் கோபூஜை, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, தென்பெண்ணையில் ஆராட்டு விழா, கலசபூஜை, கலசாபிஷேகம், வலம்புரி சங்காபிஷேகம், பகவதி சேவா, புஷ்பாபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகளை ஸ்ரீகுமார்சர்மா நடத்தி வைத்தார்.