Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சைவ தலங்களில் 61 வகை தல விருட்சம் ... மடப்புரம் காளி கோவிலில் பூட்டிக்கிடக்கும் பாதுகாப்பு அறை! மடப்புரம் காளி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் சேவை கட்டணம் உயர்வு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2013
11:12

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் சேவைகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்: பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில், மூலவருக்கு, பால், விபூதி, பன்னீர், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி வழி படுகின்றனர். மேலும், சந்தனக்காப்பு, வெள்ளி ரதம், வெள்ளி மயில் வாகனம், தங்க ரதம், திருக்கல்யாணம், கேடயம் மற்றும் தங்க காப்பு போன்ற உற்சவங்கள் செய்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
ரூ.1,300 வரை இந்நிலையில், பல ஆண்டுகளாக இதற்கான சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருந்தது. தற்போது, சேவை கட்டணங்கள், 250 ரூபாய் முதல், 1,300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பத்து நாட்களுக்கு முன் அமலுக்கு வந்துள்ளது. தற்போது இந்த சேவை கட்டணங்கள் குறித்த விளம்பர பலகைகள், தேவஸ்தான குடில்கள், மலைக்கோவில் வளாகம், சுந்தர விநாயகர் கோவில் ஆகிய இடங்களில், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சேவை கட்டண விவரம்:


சேவை விவரம்    பழைய காணிக்கை        புதிய காணிக்கை
                                               ரூபாய்                       ரூபாய்
சந்தனக் காப்பு                         3,251                    4,000
வெள்ளி ரதம்                           2,200                    3,500
வெள்ளி மயில் வாகனம்    2,000                    3,500
தங்க ரதம்                                  1,250                    2,000
திருக்கல்யாண உற்சவம்   1,100                    2,000
பஞ்சாமிர்த அபிஷேகம்      600                       1,000
கேடயத்தில்சுவாமி புறப்பாடு 500                 1,000
தங்க கவசம் சாத்துபடி              250                 500
பால், விபூதி, பன்னீர்,
தயிர், சந்தனம், இளநீர்
(ஒவ்வொன்றுக்கும்                      100             100
மாற்றம் இல்லை).

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar