ஏகாம்பரநாதர் கோவில் மதில் சுவர் சீரமைக்கும் பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2013 11:12
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், கிழக்கு, வடக்கு, மூலை வட்டம் மதில் சுவரை சீரமைக்கும் பணி துவங்கியது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் வெளிப்புற வடக்கு, கிழக்கு மூலை வட்ட மதில் சுவரில், கடந்த ஓராண்டுக்கு முன், அரச மரம் முளைத்து, சுவரில் விரிசல் ஏற்பட்டது. செடியை அகற்றிவிட்டு, விரிசல் சரி செய்யாமல் விடப்பட்டது. இதுகுறித்து கடந்த 24ம் தேதி தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தற்போது விரிசல் அடைந்த பகுதி இடிக்கப்பட்டு, சீரமைக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், மதில் சுவர் அருகே மின் கம்பி சென்றது. அது மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. இன்னும் மூன்று மாதத்திற்குள் அந்த பணி முடிந்து விடும், என்றார்.